/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் நெடுஞ்சாலையில் தேங்கி சீர்கேடு அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் நெடுஞ்சாலையில் தேங்கி சீர்கேடு
அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் நெடுஞ்சாலையில் தேங்கி சீர்கேடு
அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் நெடுஞ்சாலையில் தேங்கி சீர்கேடு
அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் நெடுஞ்சாலையில் தேங்கி சீர்கேடு
ADDED : ஜூன் 28, 2024 10:40 PM

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த காரணித்தாங்கல் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. ஒரகடம் சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஆண், பெண் ஊழியர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் உள்ள மழைநீர் கால்வாயில் நேரடியாக விடுகின்றனர்.
மழை பொய்யும் போது, கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் தேங்கி வருகிறது. மழைநீர் வடிகாலில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், பல மாதங்களாக வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால், அப்பகுதயில் கடும் துர்நாற்றம் வீசுவாதோடு, தொற்று நோய் பரவும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். எனவே, மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விடும் தனியார் குடியிருப்பு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.