/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஆவடி சினிமா தியேட்டரில் கெட்டு போன 'பப்ஸ்' விற்பனை ஆவடி சினிமா தியேட்டரில் கெட்டு போன 'பப்ஸ்' விற்பனை
ஆவடி சினிமா தியேட்டரில் கெட்டு போன 'பப்ஸ்' விற்பனை
ஆவடி சினிமா தியேட்டரில் கெட்டு போன 'பப்ஸ்' விற்பனை
ஆவடி சினிமா தியேட்டரில் கெட்டு போன 'பப்ஸ்' விற்பனை
ADDED : ஜூலை 15, 2024 06:24 AM

ஆவடி : ஆவடி ஜெ.பி.எஸ்டேட், செல்லியம்மன் கோவில் தெருவில்,'ரெமி சினிமாஸ்' திரையரங்கம் உள்ளது.
மொத்தம், 518 இருக்கைகள் கொண்ட இந்த திரையரங்கில், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், 300க்கும் மேற்பட்டோர் படம் பார்த்தனர்.
இடைவேளையின் போது, ஆவடி கோவர்த்தனகிரியைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர், 'பப்ஸ், பாப்கார்ன், சீஸ்பால்ஸ்' உள்ளிட்ட நொறுக்குத்தீனிகளை வாங்கியுள்ளார்.
அவை கெட்டுப் போய் இருந்ததால், இது குறித்து திரையரங்க மேலாளரிடம் கேட்டுள்ளார். அவர், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
கெட்டுப் போன 'பப்ஸ்' உள்ளிட்டவற்றை குழந்தைகள் சாப்பிட்டு விட்டதால், அதிர்ச்சியான பார்வையாளர்கள், 100க்கும் மேற்பட்டோர், டிக்கெட் கவுன்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
தகவலறிந்து வந்த ஆவடி போலீசார், திரையரங்கு மேலாளர் சந்தோஷ்குமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.
மேலும், கெட்டுப் போனதாக கூறப்பட்ட தின்பண்டங்கள், உணவு பாதுகாப்பு துறைக்கு அனுப்பப்பட்டன. இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.