ADDED : ஜூலை 08, 2024 05:24 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, பள்ளி தாளாளர் வித்யா சங்கர் தலைமையில் நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான குறும்படங்களை திரையிட்டு பள்ளி மாணவ -- மாணவியர், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் ஓட்டுவதே விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. விபத்தில், தலைக்காயம் ஏற்பட்டு விட்டால் பிழைப்பது கடினமாக உள்ளது. மேலும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், சிறார்கள் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள், இருசக்கர வாகனங்களில் 3 பேர் செல்வதால் ஏற்படும் விபத்துகள், பாதசாரிகள் சாலையை கடக்கும் முறைகள், கார்களில் செல்பவர்கள் இருக்கை பட்டை அணிவதன் அவசியம் ஆகியன குறித்தும் குறும்படம் திரையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ - மாணவியர், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.