/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பினாயூரில் சாலை சீரமைத்த 7 மாதங்களிலேயே சேதம் பினாயூரில் சாலை சீரமைத்த 7 மாதங்களிலேயே சேதம்
பினாயூரில் சாலை சீரமைத்த 7 மாதங்களிலேயே சேதம்
பினாயூரில் சாலை சீரமைத்த 7 மாதங்களிலேயே சேதம்
பினாயூரில் சாலை சீரமைத்த 7 மாதங்களிலேயே சேதம்
ADDED : ஜூன் 29, 2024 11:18 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பினாயூரில் இருந்து, அப்பகுதி மலையடிவாரம் வழியாக, திருமுக் கூடல் இணைப்புச் சாலை உள்ளது. பினாயூர்,சீட்டணஞ்சேரி, சாத்தணஞ்சேரி, அரும்புலியூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தோர் இந்த சாலையை பயன்படுத்தி, திருமுக்கூடல் பாலாற்று மேம்பாலம் வழியாக, வாலாஜாபாத், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குசெல்கின்றனர்.
இந்த சாலை மிகவும் பழுதடைந்து பயன்பாட்டிற்கு லாயகற்ற நிலையில் இருந்ததையடுத்து, இச்சாலையை சீரமைத்து தர அப்பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தினர். அக்கோரிக்கையை ஏற்று, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் கடந்த ஆண்டு துவங்கி, அக்டோபர் மாதம் பணி நிறைவு பெற்றது.
புதிதாக சாலை பயன்பாட்டுக்கு வந்த அடுத்த ஒரு சில மாதங்களிலேயே, தார் மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து அச்சாலை மீண்டும் சேதமானது. எனவே, இச்சாலையை மீண்டும் புனரமைப்பு பணி மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.