/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தாழ்வாக செல்லும் மின்ஒயர்கள் மரத்தில் உரசுவதால் விபத்து அபாயம் தாழ்வாக செல்லும் மின்ஒயர்கள் மரத்தில் உரசுவதால் விபத்து அபாயம்
தாழ்வாக செல்லும் மின்ஒயர்கள் மரத்தில் உரசுவதால் விபத்து அபாயம்
தாழ்வாக செல்லும் மின்ஒயர்கள் மரத்தில் உரசுவதால் விபத்து அபாயம்
தாழ்வாக செல்லும் மின்ஒயர்கள் மரத்தில் உரசுவதால் விபத்து அபாயம்
ADDED : ஆக 02, 2024 02:28 AM

காஞ்சிபுரம்,:வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சியில், விவசாய நிலம் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்தட பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதில், விவசாய நிலங்கள் வழியாக வீட்டு மின் இணைப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள மின்தட பாதையில், இரு மின்கம்பங்களுக்கு இடையே உள்ள மின் ஒயர்கள் தாழ்வாக செல்கின்றன.
இதனால், விவசாய நிலத்தில் உள்ள தென்னை உள்ளிட்ட பல மரக் கிளைகளுக்கு இடையே சிக்கும் மின் ஒயர்கள், பலத்த காற்றடிக்கும்போது, ஒன்றுடன் ஒன்று உரசும்போது மின் ஒயரில் தீப்பொறி ஏற்பட்டு மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, தாழ்வாக செல்லும் மின்ஒயர்களை இழுத்து கட்டி சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முத்தியால்பேட்டையினர் வலியுறுத்தி உள்ளனர்.