/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தாழ்வாக செல்லும் மின்கம்பி மோச்சேரியில் விபத்து அபாயம் தாழ்வாக செல்லும் மின்கம்பி மோச்சேரியில் விபத்து அபாயம்
தாழ்வாக செல்லும் மின்கம்பி மோச்சேரியில் விபத்து அபாயம்
தாழ்வாக செல்லும் மின்கம்பி மோச்சேரியில் விபத்து அபாயம்
தாழ்வாக செல்லும் மின்கம்பி மோச்சேரியில் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 30, 2024 07:06 AM

ஸ்ரீபெரும்புதுார்: குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி வழியாக, மோச்சேரி கிராமம் செல்லும் பிராதன சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில், இந்த சாலையோரம் மின் கம்பங்களின் வழியே செல்லும் மின் ஒயர், மிகவும் தாழ்வாக தொங்கியபடி செல்கின்றன. இதனால், இவ்வழியாக செல்லும் பள்ளி பேருந்து, எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் உரசும் போது, பெரும் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
இது குறித்து, ஊராட்சி நிர்வாகம் மற்றும் படப்பை மின் வாரிய அதிகாரிகளிடம், பல முறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க, மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.