ADDED : ஜூலை 15, 2024 02:45 AM

காஞ்சிபுரம்,:வாலாஜாபாத் அடுத்த, தேவரியம்பாக்கம் கிராமத்தில் இருந்து, லிங்காபுரம் கிராமம் வழியாக, சங்கராபுரம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இச்சாலையோரம், உயர் அழுத்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் உள்ளன.
இந்த மின்கம்பங்கள், பிரதான சாலையோரம் இருப்பதால், ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்தி செல்லும் போது, மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் மீது மோதும் அபாயம் உள்ளன.
இதனால், தேவரியம்பாக்கம் - சங்கராபுரம் சாலையில் உள்ள மின்மாற்றிக்கு தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.