சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்
சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்
சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 22, 2024 11:35 PM

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை ஒட்டியுள்ள மாந்தோப்பு பகுதி செல்லும், ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலை சந்திப்பில், ஒரு பகுதி சேதமடைந்து உள்ளது.
இரவு நேரத்தில் இச் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோரம் ஒதுங்கும் போது, நிலை தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
எனவே, ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.