/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கிழிந்து தொங்கும் பேனரால் கட்டியாம்பந்தலில் விபத்து அபாயம் கிழிந்து தொங்கும் பேனரால் கட்டியாம்பந்தலில் விபத்து அபாயம்
கிழிந்து தொங்கும் பேனரால் கட்டியாம்பந்தலில் விபத்து அபாயம்
கிழிந்து தொங்கும் பேனரால் கட்டியாம்பந்தலில் விபத்து அபாயம்
கிழிந்து தொங்கும் பேனரால் கட்டியாம்பந்தலில் விபத்து அபாயம்
ADDED : மார் 11, 2025 11:04 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் -- புக்கத்துறை நெடுஞ்சாலையில், கட்டியாம்பந்தல் கூட்டுச்சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர் செங்கல்பட்டு, உத்திரமேரூர், புக்கத்துறை ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் இந்த சாலையின் இருபுறமும், அரசியல் கட்சியினர் மற்றும் வணிக நிறுவனத்தினர் அடிக்கடி விளம்பர பேனர் வைத்து வருகின்றனர்.
அவ்வாறு வைக்கும் பேனர்கள் குறித்த நாட்களுக்குள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பேனர்களை வேடிக்கை பார்த்து செல்வதால், எதிரே வரும் வாகனத்தின் மீது மோதி விபத்தில் சிக்குவது தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும், அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர் ஒன்று, காற்றின் வேகத்தில் கிழிந்து தொங்குகிறது. இந்த பேனர் எந்நேரத்திலும் கிழிந்து விழும் என்பதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.
எனவே, சாலையோரத்தில் கிழிந்து தொங்கும் பேனரை அகற்ற, துறை அதிகாரிகள் முன்வருமாறு, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.