/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சேந்தமங்கலம் ரயில் கடவுப்பாதையில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை சேந்தமங்கலம் ரயில் கடவுப்பாதையில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
சேந்தமங்கலம் ரயில் கடவுப்பாதையில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
சேந்தமங்கலம் ரயில் கடவுப்பாதையில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
சேந்தமங்கலம் ரயில் கடவுப்பாதையில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 04, 2024 12:09 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
தற்போது, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், பரமேஸ்வரமங்கலம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தார் சாலை ஓரம், எம் - சாண்ட் கொட்டி பேவர் பிளாக் கற்களை அடுக்கி, சாலை இருபுறமும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், ராணிப்பேட்டை மாவட்டம், சேந்தமங்கலம் பிரதான ரயில் கடவுப்பாதையாக இருக்கும் பகுதியில், மேம்பாலம்அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டம் தயாரிக்கவில்லை.
இதனால், திருமால்பூர் - -அரக்கோணம் மற்றும் அரக்கோணம்- - திருமால்பூர் மார்க்கமாக ரயில்கள் செல்லும் போது, சேந்தமங்கலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காஞ்சிபுரம் - -அரக்கோணம் சாலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம், சேந்தமங்கலம் - -நெமிலி சாலை வரையில், 2 கி.மி., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுக்கின்றன.
எனவே, ராணிப்பேட்டை மாவட்ட சேந்தமங்கலம் ரயில் கடவுப்பாதையில் மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.