/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பள்ளியில் துப்புரவாளர்களை கூடுதலாக நியமிக்க கோரிக்கை பள்ளியில் துப்புரவாளர்களை கூடுதலாக நியமிக்க கோரிக்கை
பள்ளியில் துப்புரவாளர்களை கூடுதலாக நியமிக்க கோரிக்கை
பள்ளியில் துப்புரவாளர்களை கூடுதலாக நியமிக்க கோரிக்கை
பள்ளியில் துப்புரவாளர்களை கூடுதலாக நியமிக்க கோரிக்கை
ADDED : ஜூன் 18, 2024 04:59 AM
உத்திரமேரூர் : உத்திரமேரூரில் இயங்கும் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 1,200 மாணவியர் பயில்கின்றனர். இப்பள்ளியில், மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கென தனித்தனியாக கழிப்பறை வசதி உள்ளது.
கழிப்பறைகளை சுத்தம் செய்தல் மற்றும் பள்ளி வளாகம், வகுப்பறை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. 1,200 மாணவியர் பயிலும் இப்பள்ளியில், ஒரே துப்புரவு பணியாளர் ஈடுபடுத்தப்படும் நிலை தொடர்கிறது.
பள்ளி வளாகம் முழுதும் சுத்தம் செய்து ஒவ்வொரு வகுப்பறை மற்றும் அலுவலக அறைகளிலும் தண்ணீர் பிடித்து வைத்தல், கழிப்பறைகள் சுத்தம் செய்தல் போன்ற பணிகள் ஒரே நபர் மேற்கொள்வதில் சிரமம் உள்ளது.
இதனால், பள்ளி துாய்மை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, உத்திரமேரூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக துப்புரவு பணியாளர் நியமிக்க மாணவியரின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.