/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது காஞ்சி ரயில் நிலையத்தில் பயணியர் அவதி தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது காஞ்சி ரயில் நிலையத்தில் பயணியர் அவதி
தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது காஞ்சி ரயில் நிலையத்தில் பயணியர் அவதி
தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது காஞ்சி ரயில் நிலையத்தில் பயணியர் அவதி
தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது காஞ்சி ரயில் நிலையத்தில் பயணியர் அவதி
ADDED : ஜூன் 21, 2024 02:15 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் உள்ள புதிய ரயில் நிலையத்தில் இருந்து, அரக்கோணம், செங்கல்பட்டு, தாம்பரம்,சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயிலில்தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர்.
இதில் 'பீக் அவர்' எனப்படும் காலை நேரத்தில் இயக்கப்படும் ரயிலில் பயணிக்க டிக்கெட் வழங்கும் கவுன்டரில் பயணியர் கூட்டம் அதிகமாக இருப்பதால், டிக்கெட் வாங்க காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
எனவே, தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து ரயில்வே நிர்வாகம் சார்பில், காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில், தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் கடந்த ஆண்டு ஏப்., மாதம் அமைக்கப்பட்டது.
தினமும் திரளான பயணியர், தானியங்கி இயந்திரம் வாயிலாக டிக்கெட் எடுத்து ரயிலில் பயணித்து வந்தனர்.
இந்நிலையில், ஒரு வாரமாக தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், பயணியர், டிக்கெட் கவுடரில், நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், தாங்கள் பயணிக்க வேண்டிய ரயிலை தவறவிட சூழல் உள்ளது. எனவே, பழுதடைந்த நிலையில் உள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரத்தின் மானிட்டரில் பழுது ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளோம். விரைவில் சரி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.