/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ புதிதாக அமைத்த மின்கம்பங்களுக்கு இணைப்பு வழங்காமல் மெத்தனம் புதிதாக அமைத்த மின்கம்பங்களுக்கு இணைப்பு வழங்காமல் மெத்தனம்
புதிதாக அமைத்த மின்கம்பங்களுக்கு இணைப்பு வழங்காமல் மெத்தனம்
புதிதாக அமைத்த மின்கம்பங்களுக்கு இணைப்பு வழங்காமல் மெத்தனம்
புதிதாக அமைத்த மின்கம்பங்களுக்கு இணைப்பு வழங்காமல் மெத்தனம்
ADDED : ஜூன் 19, 2024 11:54 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காவனுார் புதுச்சேரி, பாரதிபுரம், சோழனுார் செல்லும் சாலையோரம் அப்பகுதியில் உள்ள வீடுகள், விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்க மின்தட பாதைக்காக சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், பல மின் கம்பங்களில் சிமென்ட் காரை உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் சிதிலமடைந்து இருந்தன.
பலத்த காற்றுடன் மழை பெய்தால் சேதமடைந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தால் மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் மின்வாரியத்திடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, உத்திரமேரூர் மின்வாரியம் சார்பில், காவனுார் புதுச்சேரி, பாரதிபுரம், சோழனுார், கடம்பூர் போன்ற பல்வேறு பகுதிகளில், சேதம் அடைந்த மின் கம்பங்களுக்கு மாற்றாக அதன் அருகிலேயே புதிய கம்பங்கள் அமைத்தனர்.
ஆனால், புதிய கம்பங்கள் நடப்பட்டு இரு மாதங்களுக்கு மேலாகியும், சேதம் அடைந்த பழைய கம்பங்கள் அகற்றப்பட்டு புதிய கம்பங்களுக்கு இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.
இதனால், பலத்த காற்று வீசினால், பழைய மின் கம்பம், எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழுந்து, அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிதாக மின் கம்பம் அமைத்ததன் நோக்கமே வீணாகும் நிலை உள்ளது.
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், புதிய கம்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கவும், சேதமடைந்த பழைய மின்கம்பங்களை அகற்றவும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.