Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வழிகாட்டி பலகை இல்லாமல் செயல்படும் பதிவாளர் அலுவலகம்

வழிகாட்டி பலகை இல்லாமல் செயல்படும் பதிவாளர் அலுவலகம்

வழிகாட்டி பலகை இல்லாமல் செயல்படும் பதிவாளர் அலுவலகம்

வழிகாட்டி பலகை இல்லாமல் செயல்படும் பதிவாளர் அலுவலகம்

ADDED : ஜூலை 17, 2024 09:32 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகம், ஓரிக்கை பகுதியில், நான்கு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மாவட்ட பதிவாளர் அலுவலகத்துடன், இணை பதிவாளர் அலுவலகமும் இயங்கி வருகிறது.

போலி பத்திரங்களை ரத்து செய்வதற்கு விண்ணப்பம் செய்யவும், விசாரணைக்கு ஆஜர் ஆகவும், புகார் தெரிவிக்கவும் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு அன்றாடம் பலர் வருகின்றனர்.

அதேபோல, இணை பதிவாளர் அலுவலகத்திற்கு பத்திரம் பதிவு செய்ய உள்ளூர் மட்டுமல்லாமல், வெளியூரிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு, வந்து செல்லும் வெளியூர்வாசிகளுக்கு, பதிவாளர் அலுவலக கட்டடம் எங்கு செயல்படுகிறது என தெரியாமல், குழப்பமடைகின்றனர்.

ஓரிக்கை மிலிட்டரி ரோட்டிலிருந்து, பெரியார் நகர் நோக்கி செல்லும் சாலையில், வலதுபுறத்தில் இயங்கும் இந்த அலுவலகத்திற்கு எந்த அறிவிப்பு பலகையும் இல்லை.

ஓரிக்கை பகுதியிலும், பெரியார் நகர் பகுதியிலும் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லும் வழி என எந்த வழிகாட்டி பலகையும் இல்லாததால், பலரும் குழப்பமடைகின்றனர்.

பெரியார் நகர், ஓரிக்கை, செவிலிமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிகாட்டி பலகை வைக்க வேண்டும் என, பத்திரப்பதிவு செய்ய வருவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us