/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சுங்குவார்தோப்பு உத்சவத்தில் ராமலிங்கேஸ்வரர் பங்கேற்பு இல்லை சுங்குவார்தோப்பு உத்சவத்தில் ராமலிங்கேஸ்வரர் பங்கேற்பு இல்லை
சுங்குவார்தோப்பு உத்சவத்தில் ராமலிங்கேஸ்வரர் பங்கேற்பு இல்லை
சுங்குவார்தோப்பு உத்சவத்தில் ராமலிங்கேஸ்வரர் பங்கேற்பு இல்லை
சுங்குவார்தோப்பு உத்சவத்தில் ராமலிங்கேஸ்வரர் பங்கேற்பு இல்லை
ADDED : மார் 11, 2025 06:25 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜாம்பேட்டை கிராமத்தில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மாசி மக திருவூறல் உத்சவம் நடைபெறும். அன்றைய தினம் ராமலிங்கேஸ்வரர் சுங்குவார்தோப்பில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
நடப்பாண்டிற்குரிய உத்சவம், இன்று மாலை நடைபெறுகிறது. கோவில் திருப்பணிக்கு பாலாலயம் செய்திருப்பதால், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் சுங்குவார்தோப்பு உத்சவத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறாது.
அதற்கு பதிலாக, கோவில் வளாகத்தில் உத்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மட்டுமே நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.