/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் வழங்கல் ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் வழங்கல்
ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் வழங்கல்
ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் வழங்கல்
ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் வழங்கல்
ADDED : மார் 13, 2025 10:08 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், சாலவாக்கம், பெருநகர், திருப்புலிவனம் ஆகிய ஊராட்சிகளுக்கு, குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களை வழங்கினார். அதில், 2023 --- 24ம் நிதி ஆண்டில், தூய்மை பாரத இயக்கம் மற்றும் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ், தலா, 2.52 லட்சம் கொண்ட 15.16 லட்சம் மதிப்பிலான 6 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.