/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சிறுதாமூரில் பொது வழி ஆக்கிரமிப்பு ஆதார், குடும்ப அட்டை ஒப்படைத்து எதிர்ப்பு சிறுதாமூரில் பொது வழி ஆக்கிரமிப்பு ஆதார், குடும்ப அட்டை ஒப்படைத்து எதிர்ப்பு
சிறுதாமூரில் பொது வழி ஆக்கிரமிப்பு ஆதார், குடும்ப அட்டை ஒப்படைத்து எதிர்ப்பு
சிறுதாமூரில் பொது வழி ஆக்கிரமிப்பு ஆதார், குடும்ப அட்டை ஒப்படைத்து எதிர்ப்பு
சிறுதாமூரில் பொது வழி ஆக்கிரமிப்பு ஆதார், குடும்ப அட்டை ஒப்படைத்து எதிர்ப்பு
ADDED : ஜூன் 25, 2024 06:25 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில், நேற்று, மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பொது மக்களிடம் இருந்து, 597 மனுக்களை பெற்றார்.
இதில், உத்திரமேரூர் தாலுகாவைச் சேர்ந்த சிறுதாமூர் கிராமத்தில், 15 ஆண்டுகளாக தெருவிற்கு வழி கேட்டு போராடி வருகிறோம். எந்தவித முன்னேற்றமும் இல்லை.
சிலர் ஆக்கிரமிப்பு செய்துக் கொண்டு, வழிவிட மறுத்து வருகின்றனர். இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. காவல், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை.
இதனால், பள்ளி குழந்தைகளுடன் குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஒப்படைத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., கலைவாணி, ஆதார், குடும்ப அட்டை ஒப்படைக்க வேண்டாம்.
நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் அறிவுரை வழங்குகிறோம் என, பதில் அளித்தார். இதையடுத்து, மனு அளித்து விட்டு சிறுதாமூர் கிராமத்தினர் புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையில், கலெக்டர் வளாகத்தில், வேறு ஒரு இடத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையர் ஆகியோரிடம் நேரடியாக மனுக்களை பெற்றார்.
அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து, உடனடியாக தீர்வு காண வேண்டும் என, உத்தரவிட்டு இருந்தார்.
இந்த முகாமில், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஜெயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.