/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கழிவுநீர் தேங்குவதை கண்டித்து மறியல் கழிவுநீர் தேங்குவதை கண்டித்து மறியல்
கழிவுநீர் தேங்குவதை கண்டித்து மறியல்
கழிவுநீர் தேங்குவதை கண்டித்து மறியல்
கழிவுநீர் தேங்குவதை கண்டித்து மறியல்
ADDED : ஜூன் 17, 2024 03:53 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி, 10வது வார்டு, வெள்ளகுளம் தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதால், இப்பகுதியினர் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டியநிலை உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு உடல் சுகவீனம் ஏற்படுவதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சில நாட்களாக, குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் அப்பகுதிமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் தெரிவித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட வெள்ளக்குளம் தெரு பகுதியினர், நேற்று முன்தினம் இரவு, காஞ்சிபுரம் -- அரக்கோணம் சாலையில் குஜராத் சத்திரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகாஞ்சி போலீசார், மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சு நடத்தினர். இதையடுத்து சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.