/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மருத்துவமனை நுழைவுவாயிலில் இடையூறாக வாகனங்கள் நிறுத்தம் மருத்துவமனை நுழைவுவாயிலில் இடையூறாக வாகனங்கள் நிறுத்தம்
மருத்துவமனை நுழைவுவாயிலில் இடையூறாக வாகனங்கள் நிறுத்தம்
மருத்துவமனை நுழைவுவாயிலில் இடையூறாக வாகனங்கள் நிறுத்தம்
மருத்துவமனை நுழைவுவாயிலில் இடையூறாக வாகனங்கள் நிறுத்தம்
ADDED : ஜூலை 22, 2024 11:42 PM

ஸ்ரீபெரும்புதுார், : சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், ஸ்ரீபெரும்புதுாரில் ஏழு ஏக்கர் பரப்பளவில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு, சுற்றுவட்டார கிராமத்தினர் மற்றும் சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஏராளமானோர் நாள்தோறும் சிகிச்சை பெறுகின்றனர்.
தவிர, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள், ஆம்புலன்ஸ் வாயிலாக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், தங்களின் வாகனங்களை, மருத்துவமனை எதிரே, ஆம்புலன்ஸ் வரும் வழியில் நிறுத்தி செல்கின்றனர்.
மருத்துவமனை நுழைவுவாயில் சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தும் இருசக்கர வாகனங்களால், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, அவசர சிகிச்சைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தங்களின் வாகனங்களை, ஆம்புலன்ஸ் சென்றுவர இடையூறு இல்லாமல், வேறு இடத்தில் நிறுத்த, மருத்துவமனை நிர்வாகம் நடவடிகை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.