Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர வாய்ப்பு

ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர வாய்ப்பு

ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர வாய்ப்பு

ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர வாய்ப்பு

ADDED : ஜூலை 11, 2024 11:58 PM


Google News
காஞ்சிபுரம்:தமிழகத்தில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில், கிராமம் மற்றும் நகரங்களின் வசிக்கும் ஏழை, எளிய கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர் வாரிய உறுப்பினராக சேரலாம்.

குறிப்பாக, www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற வலை பயன்பாட்டின் Web Application மூலமாக, இ- - சேவை மையங்களிலும் தங்களின் விபரங்களை பதிவு செய்து, வாரிய உறுப்பினராக சேரலாம்.

இதன் மூலமாக, சமூக நலத்துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us