நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
ADDED : மார் 14, 2025 12:24 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.
சாலவாக்கம் ஊராட்சி தலைவர் சத்யா சக்திவேல் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.
நுகர்பொருள் வாணிப கழக காஞ்சிபுரம் மண்டல மேலாளர் அருள் வனிதா, தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல, சிறுபினாயூர் ஊராட்சிக்கு உட்பட்ட, எஸ்.மாம்பாக்கம் கிராமத்தில், உத்திரமேரூர் ஒன்றியக் குழு துணைத் தலைவர் வசந்தி தலைமையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.