/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வரும் 14ல் மாணிக்கவாசகர் குருபூஜை ஒரு லட்சம் ருத்ராட்சத்திலான தேர் பவனி வரும் 14ல் மாணிக்கவாசகர் குருபூஜை ஒரு லட்சம் ருத்ராட்சத்திலான தேர் பவனி
வரும் 14ல் மாணிக்கவாசகர் குருபூஜை ஒரு லட்சம் ருத்ராட்சத்திலான தேர் பவனி
வரும் 14ல் மாணிக்கவாசகர் குருபூஜை ஒரு லட்சம் ருத்ராட்சத்திலான தேர் பவனி
வரும் 14ல் மாணிக்கவாசகர் குருபூஜை ஒரு லட்சம் ருத்ராட்சத்திலான தேர் பவனி
ADDED : ஜூலை 11, 2024 12:14 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், திருவள்ளுவர் தெருவில், காமாட்சியம்மன் உடனுறை பணாமணீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வரும் 14ம் தேதி 9வது ஆண்டு மாணிக்கவாசகர் குரு பூஜை விழாவில், 108 திருவிளக்கு பூஜை, 108 பால்குட விழா, குடை உற்சவம் மற்றும் 1 லட்சம் ருத்ராட்சத்திலான தேர் பவனி விழா நடைபெறுகிறது.
விழாவையொட்டி 14ம் தேதி காலை 6:00 மணிக்கு இடப கொடியேற்றமும், தொடர்ந்து திருவாசகம் முற்றோதல், சிற்றுண்டி வழங்குதலும், காலை 8:30 மணிக்கு, 1,000 பக்தர்களுக்கு ருத்ராட்சம் அணிவித்தலும், 9:00 மணிக்கு குடை உற்சவம், 108 பால்குட ஊர்வலத்தில், மாணிக்கவாசகர், ஒரு லட்சம் ருத்ராட்சத்தால் தேரில் பவனிவலம் வருகிறார்.
பிற்பகல் 12:00 மணிக்கு பாலாபிஷேகமும், மதியம் 1:00 மணிக்கு அன்னம்பாலிப்பும், மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7:00 மணிக்கு மஹா தீபாராதனையும் நடைபெறுகிறது.
ரிஷப வாகனம்: காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
ஆனி மக நட்சத்திரத்தை முன்னிட்டு, மாணிக்கவாசகர் குருபூஜை விழா நேற்று முன்தினம், மாலை 3:00 மணி அளவில் ஞானசேகர் என்பவரின் திருவாசக விண்ணப்பம்.
நேற்று முன்தினம், மாலை 5:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, ரிஷப வாகனத்தில், மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய மாணிக்கவாசகர் வீதியுலா வந்தார்.