/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பயன்பாடின்றி வீணாகும் செவிலிமேடு கழிப்பறை பயன்பாடின்றி வீணாகும் செவிலிமேடு கழிப்பறை
பயன்பாடின்றி வீணாகும் செவிலிமேடு கழிப்பறை
பயன்பாடின்றி வீணாகும் செவிலிமேடு கழிப்பறை
பயன்பாடின்றி வீணாகும் செவிலிமேடு கழிப்பறை
ADDED : ஜூன் 17, 2024 04:08 AM

செவிலிமேடு, : காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு மேட்டு காலனி பகுதியினருக்காக, ஐந்து ஆண்டுகளுக்கு முன், மாநகராட்சி சார்பில், பொது கழிப்பறை கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இப்பகுதியினர் பொது கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன், கழிப்பறையின் தண்ணீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டுள்ள நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்தது.
மின்மோட்டாரை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை. தண்ணீர் வசதி இல்லாததால், கழிப்பறை அசுத்தமாகி பயன்படுத்த முடியாத நிலையில் துர்நாற்றம் வீசுகிறது..
மேலும், கழிப்பறை கட்டடத்திற்குள் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளதால், இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன.
பயன்பாடின்றி கிடக்கும் கழிப்பறை கட்டடத்தின் கூரையில் முளைத்த அரசமரச் செடியின் வேர்கள் வேரூன்றி சுவருக்கு வெளியே வந்துள்ளது.
இதனால், நாளடைவில் கட்டடம் வலுவிழுந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. பொது கழிப்பறை பயன்பாட்டில் இல்லாததால், வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத பெண்கள், புதர் மண்டிய பகுதியை திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய அவலநிலை உள்ளது.
எனவே, பொது கழிப்பறையை சீரமைத்து, முறையாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, செவிலிமேடு மேட்டு காலனியினர் வலியுறுத்தி உள்ளனர்.