/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கிரிக்கெட்டில் பெருங்களத்துாருக்கு தொல்லை அளித்த 'மஸ்கிடோஸ்' கிரிக்கெட்டில் பெருங்களத்துாருக்கு தொல்லை அளித்த 'மஸ்கிடோஸ்'
கிரிக்கெட்டில் பெருங்களத்துாருக்கு தொல்லை அளித்த 'மஸ்கிடோஸ்'
கிரிக்கெட்டில் பெருங்களத்துாருக்கு தொல்லை அளித்த 'மஸ்கிடோஸ்'
கிரிக்கெட்டில் பெருங்களத்துாருக்கு தொல்லை அளித்த 'மஸ்கிடோஸ்'
ADDED : ஜூன் 10, 2024 05:52 AM

சென்னை : இந்திய கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாநில அளவிலான லீக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான போட்டிகள் மாநிலத்தின் பல பகுதியில் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள கல்லுாரிகள், கிளப், பல்துறை நிறுவனங்கள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
அணிகள் யாவும் மண்டலம் வாரியாக குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கின்றன. அதன்படி, 'பி' மண்டலம், பிரிவு 3ல் இடம் பெற்றுள்ள, சென்னையைச் சேர்ந்த பெருங்களத்துார் கிரிக்கெட் அணியும், மாம்பலம் மஸ்கிடோஸ் அணியும் லீக் போட்டியில் மோதின.
முதலில் களமிறங்கியபெருங்களத்துார் அணிக்கு, விக்னேஷ் 61 ரன்களைச் சேர்த்து நம்பிக்கையூட்ட பக்கபலமாக பிரவீன் 49 ரன்கள் சேர்க்க, மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறியதால், அந்த அணி 49.2 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
அடுத்து களமிறங்கிய மாம்பலம் மஸ்கிடோஸ் அணிக்கு, கவுரி சங்கர் அரண்போல் நின்று ரன்களைக் குவித்தார்.
இவர் 131 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் குவிக்க, துணையாக கதிரேசன் அரை சதம் கடக்க, அந்த அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதே பிரிவின் மற்றொரு போட்டியில், ஸ்பிக் நிறுவன அணி மெட்ராஸ் ஆர்யன் கிளப் அணியை ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.