/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'வரும் முன் காப்போம்' திட்ட முகாமில் 1,030 பேருக்கு மருத்துவ பரிசோதனை 'வரும் முன் காப்போம்' திட்ட முகாமில் 1,030 பேருக்கு மருத்துவ பரிசோதனை
'வரும் முன் காப்போம்' திட்ட முகாமில் 1,030 பேருக்கு மருத்துவ பரிசோதனை
'வரும் முன் காப்போம்' திட்ட முகாமில் 1,030 பேருக்கு மருத்துவ பரிசோதனை
'வரும் முன் காப்போம்' திட்ட முகாமில் 1,030 பேருக்கு மருத்துவ பரிசோதனை
ADDED : ஜூலை 21, 2024 06:27 AM
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் கிராமத்தில், 'கலைஞரின் வரும் முன் காப்போம்' மருத்துவ திட்ட முகாம் நேற்று நடந்தது.
திருமுக்கூடல், புல்லம்பாக்கம் உள்ளிட்ட கிராமத்தினர் இம் முகாமில் பங்கேற்று பரிசோதனை மற்றும் நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர். படாளம் கற்பக விநாயகம் மருத்துவமனையில் இருந்து, மருத்துவர்கள் வரவைக்கப்பட்டனர்.
முகாமில், இதய நோய், நுரையீரல், எலும்பு மற்றும் நரம்பு பாதிப்பு கண் மருத்துவம் பெண்கள் மகப்பேறு பிரிவு, காசநோய், நீரீழிவு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்டவை குறித்தும் இம்முகாமில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. உத்திரமேரூர் தி.மு.க, - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று 20 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பரிசு பெட்டகங்கள் மற்றும் 'மக்களைத் தேடி மருத்துவ' திட்டத்தில் மருந்து, மாத்திரைகள் அடங்கிய பெட்டகங்கள் 5 நபருக்குவழங்கினார்.
திருமுக்கூடல் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 466 ஆண்கள், 512 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 1,030 நபர்களுக்கு இம்முகாமில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 32 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
இதில், உத்திரமேரூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பவுல் யேசுதாஸ், சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார்உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.