வாகன ஓட்டிகளுக்கு மருத்துவ முகாம்
வாகன ஓட்டிகளுக்கு மருத்துவ முகாம்
வாகன ஓட்டிகளுக்கு மருத்துவ முகாம்
ADDED : ஜூன் 01, 2024 04:25 AM

ஸ்ரீபெரும்புதுார் ; ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதுார் சுங்கச்சாவடி அருகே, வாகன ஓட்டிகளுக்கு மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலர் குமரா தலைமை தாங்கினார். சவீதா மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று பள்ளி, கல்லுாரி, தனியார் பஸ், ஆட்டோ, கார் ஓட்டுனர்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு கண், காது, இ.சி.ஜி., உள்ளிட்ட உடல் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினர்.
அதன்பின், சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம், விதிமுறைகள், ஓட்டுனர்களின் உடல் தகுதி, கண் பார்வை உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.