/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நுாக்கலம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு நுாக்கலம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
நுாக்கலம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
நுாக்கலம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
நுாக்கலம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
ADDED : ஜூன் 10, 2024 05:01 AM
உத்திரமேரூர் : உத்திரமேரூர், எல்.எண்டத்துார் சாலையில் நுாக்கலம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் மூன்று நிலைகளுடன் புதிதாக ராஜகோபுரம், 27 நட்சத்திரங்கள் மற்றும் நவக்கிரஹ ராசி மண்டலம் அமைக்கப்பட்டு, கடந்த ஏப்., 21ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
தொடர்ந்து தினமும் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதில், நிறைவு நாளான நேற்று காலை மண்டலாபிஷேக பூர்த்தி மற்றும் 108 சங்காபிஷேகமும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு நுாக்கலம்மன் வீதியுலா நடந்தது.