/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வலம்புரி விநாயகருக்கு மஹா கும்பாபிஷேகம் வலம்புரி விநாயகருக்கு மஹா கும்பாபிஷேகம்
வலம்புரி விநாயகருக்கு மஹா கும்பாபிஷேகம்
வலம்புரி விநாயகருக்கு மஹா கும்பாபிஷேகம்
வலம்புரி விநாயகருக்கு மஹா கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 12, 2024 10:53 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 47வது வார்டு அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பில், வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகக்குழு மற்றும் கிராமத்தினர் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படிபல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று, காலை 10:00 மணிக்கு கலச புறப்பாடும், தொடர்ந்து கோவில் கோபுர விமான கலசத்திற்கு சர்வசாதகம் சதீஷ்குமார் சிவாச்சாரியார் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.
காலை 10:30 மணிக்கு மஹா அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.