/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மரக்கால் அளவு மாலையில் வல்லக்கோட்டை முருகன் மரக்கால் அளவு மாலையில் வல்லக்கோட்டை முருகன்
மரக்கால் அளவு மாலையில் வல்லக்கோட்டை முருகன்
மரக்கால் அளவு மாலையில் வல்லக்கோட்டை முருகன்
மரக்கால் அளவு மாலையில் வல்லக்கோட்டை முருகன்
ADDED : மார் 11, 2025 10:58 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஏழு அடி உயரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில், மாசி மாத செவ்வாய்க்கிழமையையொட்டி, நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு, உத்சவர் முருகன், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரணிய சுவாமி, மூலவர் முருகபெருமானுக்கு கோ பூஜை, 5:30 மணிக்கு பால் அபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து, மூலவர் படியளவு மாலை அலங்காரத்திலும், உற்சவர் மரக்கால் அளவு மாலை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா, அரோகரா கோஷமிட்டு முருபெருமானை வழிபட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில், பொங்கல், மோர் உள்ளிட்டவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.