ADDED : ஆக 02, 2024 02:33 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அடுத்த, மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 24; அதே போல, வாலாஜாபாத் தாலுகா, ஏலக்காய்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி, 21.
இருவர் மீதும், 5க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த மாதம் வழிப்பறி வழக்கு ஒன்றில், ஒரகடம் போலீசார் இருவரையும் கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் பரிந்துரையின்படி, கலெக்டர் கலைச்செல்வி இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் இருவரும் அடைக்கப்பட்டனர்.