ADDED : ஜூன் 18, 2024 05:09 AM

எலும்பு கூடாக மாறிய மின்கம்பத்தால் அபாய
உத்திரமேரூர் ஒன்றியம், அகரம்தூளி, அத்தியூர், மேல்துாளி உள்ளிட்ட பகுதியில் விவசாய நிலங்களுக்கு தேவையான மின் இணைப்பு வழங்க அகரம்துாளி கிராம சாலையோரம் மின்தட பாதைக்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுஉள்ளன.
இதில், ஒரு மின்கம்பத்தில் சிமென்ட் காரை பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் உடைந்து விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
எனவே, பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க உத்திரமேரூர் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வெ.தனசேகரன்,
உத்திரமேரூர்.
வேகவதி ஆற்றில் தரைப்பாலம்
அமைப்பது எப்போது
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதிக்கும், திருப்பருத்திகுன்றம் விவேகானந்தர் நகருக்கும் இடையே உள்ள வேகவதி ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் சில ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்துவிட்டது. இதையடுத்து இருபகுதிக்கும் இடையே புதிதாக பாலம் அமைக்க கடந்த ஆண்டு ராட்சத குழாய்கள் கொண்டு வந்து வேகவதி ஆற்றங்கரையில் போடப்பட்டன.
இருப்பினும், தரைப்பாலம் கட்டுமானப் பணி துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பருவமழையின்போது வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், பிள்ளையார்பாளையம்,- திருப்பருத்திகுன்றம் விவேகானந்தர் நகர் இடையே போக்குவரத்து துண்டிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, வேகவதி ஆற்றில் தரைப்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகமனநடவடிக்கை எடுக்க வேண்டும்.
--- சி.மணிகண்டன்,
காஞ்சிபுரம்.