/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கன்னிகாபுரம் - -தாட்டித்தோப்பு வேகவதி ஆற்றில் கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டும் பணி கன்னிகாபுரம் - -தாட்டித்தோப்பு வேகவதி ஆற்றில் கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டும் பணி
கன்னிகாபுரம் - -தாட்டித்தோப்பு வேகவதி ஆற்றில் கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டும் பணி
கன்னிகாபுரம் - -தாட்டித்தோப்பு வேகவதி ஆற்றில் கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டும் பணி
கன்னிகாபுரம் - -தாட்டித்தோப்பு வேகவதி ஆற்றில் கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டும் பணி
ADDED : ஜூன் 05, 2024 02:46 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, கன்னிகாபுரம் - தாட்டித்தோப்பு இடையே செல்லும் வேகவதி ஆற்றின் குறுக்கே, 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தரைப்பாலம், 2022ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது சேதமானது.
இப்பாலம் சேதமானதால், தாட்டித்தோப்பு மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 2 கி.மீ., துாரம் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், சேதமடைந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து, மாநகராட்சியின் அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 2.29 கோடி ரூபாய் மதிப்பில், கன்னிகாபுரம் - தாட்டித்தோப்பு இடையே உள்ள வேகவதி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் பூமி பூஜை போடப்பட்டது. இதில், அமைச்சர் அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.
பூமி பூஜை போடப்பட்டு ஒராண்டு நிறைவு பெற உள்ள நிலையில், பாலம் கட்டுமானப் பணி துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது இதனால், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையின்போது, வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், மீண்டும் கன்னிகாபுரம் - -தாட்டித்தோப்பு இடையே போக்குவரத்து துண்டிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் போர்க்கால அடிப்படையில் கன்னிகாபுரம் -- தாட்டித்தோப்பு இடையே புதிய பாலம் கட்ட வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.