/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் மீடியன் நுகர்வோர் சங்கம் கலெக்டருக்கு மனு காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் மீடியன் நுகர்வோர் சங்கம் கலெக்டருக்கு மனு
காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் மீடியன் நுகர்வோர் சங்கம் கலெக்டருக்கு மனு
காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் மீடியன் நுகர்வோர் சங்கம் கலெக்டருக்கு மனு
காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் மீடியன் நுகர்வோர் சங்கம் கலெக்டருக்கு மனு
ADDED : ஜூலை 14, 2024 12:14 AM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் பிரதான மாநில நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்க மீடியன் அமைக்க வேண்டும் என, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி, காஞ்சிபுரம் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
மனு விபரம்:
காஞ்சிபுரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பிரதான சாலைகளில் போக்குவரத்து அதிகரித்துள்ளன.
குறிப்பாக செங்கல்பட்டு - காஞ்சிபுரம், காஞ்சிபுரம் - அரக்கோணம் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகரித்துள்ளன.
செங்கல்பட்டு, தாம்பரம், அரக்கோணம், திருத்தணி, திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் சாலை, மாநில நெடுஞ்சாலையாக இருப்பதால், இவ்விரு சாலையும், அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
வாகன போக்குவரத்துக்கு ஏற்ப இரு சாலையும் அகலமாக உள்ளதால், எதிர் திசையில் வரும் வாகனங்கள் தாறுமாறாக வருகின்றன.
குறிப்பாக பள்ளி, கல்லுாரி, வணிக நிறுவனம் நிறைந்த முத்தியால்பேட்டை - பெரியார் நகர், காஞ்சிபுரம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் மீடியன் அமைக்காததால், எதிர் திசையில் வரும் வாகனங்கள் சாலையின் இடதுபக்கமாக வராமல், சாலையின் நடுவே தாறுமாறாக வருகின்றன.
முன்னால் செல்லும் வாகனங்கள் திடீரென திரும்புவதாலும், சாலையில் உலாவும் மாடுகள், பாதசாரிகள் சாலையை கடப்பதாலும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட ஊர்களில் சாலையில் மீடியன் உள்ளதால், விபத்துகள் குறைந்துள்ளன.
அதேபோல, காஞ்சிபுரத்திலும், முத்தியால்பேட்டை - பெரியார் நகர் மற்றும் காஞ்சிபுரம் - அரக்கோணம் மாநில சாலையில் கான்கிரீட் மீடியன் அமைக்க, அமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.