/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'காஞ்சி ஆயிரம்' நுால் 19ல் மணிமண்டபத்தில் வெளியீடு 'காஞ்சி ஆயிரம்' நுால் 19ல் மணிமண்டபத்தில் வெளியீடு
'காஞ்சி ஆயிரம்' நுால் 19ல் மணிமண்டபத்தில் வெளியீடு
'காஞ்சி ஆயிரம்' நுால் 19ல் மணிமண்டபத்தில் வெளியீடு
'காஞ்சி ஆயிரம்' நுால் 19ல் மணிமண்டபத்தில் வெளியீடு
ADDED : ஜூலை 14, 2024 12:26 AM
காஞ்சிபுரம்,:தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை, கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறை மேற்பார்வையில் இயங்கும், தொல்லியல் கழகம், விழுப்புரம் உமா கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து, காஞ்சி சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கின் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தின் சிறப்புகளை உணர்த்தும் வகையில், புகைப்படம் மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் விழா வரும் 19ம் தேதி, ஓரிக்கையில் மஹா பெரியவர் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 'காஞ்சி ஆயிரம்' நுாலை வெளியிட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி ஆசியுரை வழங்குகிறார்.
'காஞ்சி ஆயிரம்' என்ற நுாலில், காஞ்சிபுரம் குறித்த வரலாற்று குறிப்பு, திருக்கோவில்கள், அவைகள் குறித்த அரிய குறிப்புகள், புராண செய்திகள் என, 1,000த்துக்கும் மேற்பட்ட தகவல்களின் தொகுப்பான இந்நுால், சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் ஓர் அங்கமான சங்கரா பதிப்பகத்தால் உருவாக்கப் பெற்றுள்ளது.
இந்நுாலை காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட, ஓய்வுபெற்ற, தமிழ்நாடு தொல்லியல் துறை துணை இயக்குனர் கி.ஸ்ரீதரன் பெற்றுக் கொள்கிறார்.இத்தகவலை காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.