/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ புரோக்கர்களின் பிடியில் காஞ்சி தாலுகா ஆபீஸ் புரோக்கர்களின் பிடியில் காஞ்சி தாலுகா ஆபீஸ்
புரோக்கர்களின் பிடியில் காஞ்சி தாலுகா ஆபீஸ்
புரோக்கர்களின் பிடியில் காஞ்சி தாலுகா ஆபீஸ்
புரோக்கர்களின் பிடியில் காஞ்சி தாலுகா ஆபீஸ்
ADDED : ஜூன் 07, 2024 10:49 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய் துறையில் மேற்கொள்ளப்படும் பட்டா மாற்றம், உட்பிரிவு செய்தல், பட்டா திருத்தம், நஞ்சை நிலங்களுக்கான தடையில்லா சான்று வழங்கல், பட்டா மேல்முறையீடு விசாரணை என, பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
இதுபோன்ற வருவாய் துறை பணிகளுக்கு, கமிஷன் பெறாமல், எந்தவொரு சேவையையும், தாலுகா அலுவலகங்களில் பெற முடிவதில்லை என, மக்கள் புலம்புகின்றனர். வருவாய் துறையினர் கை நீட்டாமல், எந்தவொரு பணியையும் இன்றைய சூழலில் செய்து தருவதில்லை.
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில், வருவாய் துறை சம்பந்தமான எந்தவொரு சேவைக்கும், புரோக்கர்கள் மூலமாக சென்றால் தான் வேலை முடிவதாக, விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ப
புரோக்கர்களின் பிடியில், காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் இயங்குவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், எளிதில் அதிகாரிகளையும் அணுக முடிவதில்லை.
தாலுகா அலுவலகத்தில், லஞ்சம் தலைவிரித்தாடுவதாக, காஞ்சிபுரம் நகரவாசிகள் மற்றும் விண்ணப்பதாரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, புரோக்கர்கள் பிடியிலிருந்து, தாலுகா அலுவலகத்தை விடுவிக்க, அடுத்த வாரம் புதிதாக பொறுப்பேற்க உள்ள தாசில்தார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கருத்து எழுந்துள்ளது.