/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி - செங்கை சாலை விரிவுபடுத்தும் பணியில் சிக்கல் இடம் பெயர மறுத்து ஆக்கிரமிப்பாளர்கள் அடம் காஞ்சி - செங்கை சாலை விரிவுபடுத்தும் பணியில் சிக்கல் இடம் பெயர மறுத்து ஆக்கிரமிப்பாளர்கள் அடம்
காஞ்சி - செங்கை சாலை விரிவுபடுத்தும் பணியில் சிக்கல் இடம் பெயர மறுத்து ஆக்கிரமிப்பாளர்கள் அடம்
காஞ்சி - செங்கை சாலை விரிவுபடுத்தும் பணியில் சிக்கல் இடம் பெயர மறுத்து ஆக்கிரமிப்பாளர்கள் அடம்
காஞ்சி - செங்கை சாலை விரிவுபடுத்தும் பணியில் சிக்கல் இடம் பெயர மறுத்து ஆக்கிரமிப்பாளர்கள் அடம்
ADDED : ஜூலை 05, 2024 12:22 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை விரிவாக்க திட்டப் பணியில், ஆக்கிரமிப்பாளர்கள் மாற்று இடத்திற்கு செல்லாமல்அடம் பிடிப்பதால், விரிவுபடுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வரையில், 85 கி.மீ., இருவழிச்சாலை உள்ளது. இந்த இருவழிச் சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
முதலில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் வரையில், 41 கி.மீ., துாரத்திற்கு, 448 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. இது, 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதில், வாலாஜாபாத் புறவழிச் சாலையில், உயர்மட்ட பாலங்களின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
அதேபோல, காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 44 கி.மீ., துாரத்திற்கு, 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, நான்குவழிச் சாலை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், காஞ்சிபுரம் முதல், பரமேஸ்வரமங்கலம் வரை, 22 கி.மீ., துாரம் தார் சாலை போடும் பணி நிறைவு பெற்று உள்ளது.
இதில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை விரிவுப்படுத்துவதற்கு, கடந்த மார்ச் மாதம் இறுதியில் முடிக்க வேண்டும் என, கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும், பழையசீவரம் பாலம், பாலுார் வளைவில் பாலம் கட்டும் பணி மற்றும் செங்கல்பட்டு ஆத்துார் பகுதியில் சாலை விரிவாக்க பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதால், சாலை விரிவாக்க பணிகளில் குறித்த நேரத்திற்குள் முடிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.
இதனால், காஞ்சிபுரம் -செங்கல்பட்டு வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், தினந்தோறும்சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
எனவே, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாகன போக்குவரத்து நெரிசல் இன்றி செல்வதற்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாலுார் வளைவில், ஒரு பகுதி பாலம் கட்டும் பணியை முடித்து போக்குவரத்து மாற்றம் செய்த பின், மற்றொரு பகுதி பாலம் கட்டும் பணி துவக்கப்படும்.
ஆத்துார் நெடுஞ்சாலை துறையோரம் இருக்கும் வீடுகளுக்கு கருணைத்தொகை வழங்கி, இரு ஆண்டுகளாகின்றன. குடியிருப்பு வாசிகள் இன்னமும் சாலையோர வீடுகளை காலி செய்து கொடுக்கவில்லை.
மாற்று இடம் வேண்டும்என, குடியிருப்புவாசிகள் கோரிக்கை அளித்தனர். மாவட்ட நிர்வாகமும் மாற்றும் இடம் வழங்கியும்வீடுகள் காலி செய்யவில்லை. இதனால், சாலை விரிவாக்க பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளன.
இருப்பினும், ஓரிரு மாதங்களில் பணிகள்விரைவுபடுத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன்பின், வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வழி வகை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.