/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தனி நபர் வருமானத்தில் காஞ்சிக்கு 2வது இடம் தனி நபர் வருமானத்தில் காஞ்சிக்கு 2வது இடம்
தனி நபர் வருமானத்தில் காஞ்சிக்கு 2வது இடம்
தனி நபர் வருமானத்தில் காஞ்சிக்கு 2வது இடம்
தனி நபர் வருமானத்தில் காஞ்சிக்கு 2வது இடம்
ADDED : மார் 13, 2025 10:17 PM
காஞ்சிபுரம்,:தமிழகத்தின், 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழக பொருளாதார ஆய்வறிக்கையை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழக அரசு, முதன் முதலில் வெளியிட்ட இந்த ஆய்வறிக்கையில், பல்வேறு பொருளாதார விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த பொருளாதார அறிக்கை, தமிழகத்தை நான்கு மண்டலங்களாக பிரித்து எடுக்கப்பட்டுள்ளது.
இதில், வடக்கு மண்டலத்தில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி என, ஒன்பது மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இம்மாவட்டங்களில், கடந்த 2024 - 25ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 5.97 லட்சம் கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, தமிழகத்தின் 38 மாவட்டங்களில் முதன்மையானதாக செங்கல்பட்டு மாவட்டம் தனி நபர் வருமானத்தில் 6,47,962 ரூபாயில் உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் 6,47,474 ரூபாய்; சென்னை மாவட்டம் 5,19,941 ரூபாய் என முறையே இரண்டு, மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களும் ஒன்றாக இருந்த நிலையில், 2019ல் இரு மாவட்டங்களும் பிரிந்து செயல்படுகின்றன.
இரு மாவட்டங்களிலும், சிப்காட், சிட்கோ, ஐ.டி., கம்பெனிகள், சிறு, குறு தொழில் மையங்கள், குவாரி, சுற்றுலா, விவசாயம், தொழில் முனைவோர் என, ஏராளமான பொருளாதார வாய்ப்புகள் உள்ளன.
மாவட்டத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் சதவீதம், கொரோனா பரவல் சமயத்தில் எதிர்கொண்ட சவால்கள், தேசிய அளவிலான பொருளாதாரம், உள்நாட்டு உற்பத்தி, விவசாயம், தொழில் முதலீடு, மாவட்ட வாரியான பொருளாதாரம் என, ஏராளமான விபரங்களை கொண்டு எடுக்கப்பட்டு உள்ளன.