மின் பெட்டி சீரமைக்க வலியுறுத்தல்
மின் பெட்டி சீரமைக்க வலியுறுத்தல்
மின் பெட்டி சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 29, 2024 04:57 AM
காஞ்சிபுரம், ; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், இரவு நேரத்தில் வெளிச்சம் தரும் வகையில், சாலையோரம் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுரகேஸ்வரர் கோவிலை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் அடி பாகத்தில், மின் விளக்கை இயக்குவதற்கான மின் பெட்டி திறந்த நிலையில் உள்ளது.
மின் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளதால், அவ்வழியாக செல்லும் சிறுவர்கள், அவற்றை பிடித்து இழுத்தால், உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், தெரு மின்விளக்கு கம்பத்தில், திறந்து கிடக்கும் மின் பெட்டியை பாதுகாப்பாக மூடி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திஉள்ளனர்.