/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உடைந்த குடிநீர் தொட்டி மாற்ற வலியுறுத்தல் உடைந்த குடிநீர் தொட்டி மாற்ற வலியுறுத்தல்
உடைந்த குடிநீர் தொட்டி மாற்ற வலியுறுத்தல்
உடைந்த குடிநீர் தொட்டி மாற்ற வலியுறுத்தல்
உடைந்த குடிநீர் தொட்டி மாற்ற வலியுறுத்தல்
ADDED : ஜூன் 18, 2024 05:43 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சர்வதீர்த்தகுளம் தென்கரை பகுதியில் வசிப்பவர்களுக்கு கூடுதல் குடிநீர் ஆதாரமாக அப்பகுதியில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், 10 ஆண்டுகளுக்கு முன் சிறுமின்விசை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. வீட்டு உபயோக கூடுதல் தேவைக்கு அப்பகுதியினர் குடிநீர் தொட்டி நீரை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், இரு வாரங்களுக்கு முன், அப்பகுதியில் மேய்ச்சலுக்காக வந்த மாடுகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டு, குடிநீர் தொட்டியில் முட்டியதில், குடிநீர் தொட்டி உடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், தொட்டியில் தண்ணீரை நிரப்பி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, உடைந்த நிலையில் உள்ள பழைய குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய தொட்டி அமைக்கவும், தொட்டியை சுற்றிலும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.