/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க வலியுறுத்தல் சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க வலியுறுத்தல்
சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க வலியுறுத்தல்
சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க வலியுறுத்தல்
சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 05, 2024 12:17 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், திம்மசமுத்திரம் ஊராட்சி, அம்மன்குளம் சாலையில், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், அரிசி ஆலைகள், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்தட பாதைக்காக மின்கம்பங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இதில், ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. நாளுக்கு நாள் சாய்ந்து வரும் மின்கம்பம், பலத்த காற்றுடன் மழை பெய்தால் முற்றிலும் சாய்ந்து விழுந்தால் மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.