/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கிராம சேவை கட்டடத்தில் மதுப்பிரியர்கள் அட்டகாசம் கிராம சேவை கட்டடத்தில் மதுப்பிரியர்கள் அட்டகாசம்
கிராம சேவை கட்டடத்தில் மதுப்பிரியர்கள் அட்டகாசம்
கிராம சேவை கட்டடத்தில் மதுப்பிரியர்கள் அட்டகாசம்
கிராம சேவை கட்டடத்தில் மதுப்பிரியர்கள் அட்டகாசம்
ADDED : ஜூன் 29, 2024 11:11 PM

காஞ்சிபுரம்:மதுரமங்கலம் அடுத்த, ஓ.எம்.மங்கலத்தில் இருந்து, ராணிப்பேட்டை மாவட்டம், சகாயத்தோட்டம் பகுதிக்கு செல்லும் சாலையோரம், ஓ.எம்.மங்கலம் கிராம சேவை மையக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
இந்த கட்டடத்திற்கு கம்பி பாதுகாப்பு வசதி இல்லை. இதனால், இரவு நேரங்களில், மதுப்பிரியர்கள் கிராம சேவை கட்டடத்தில் ஒதுங்குகினறனர்.
மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை கட்டடம் அருகே, உடைத்துவிட்டு செல்வதால், அந்த சாலை வழியாக செல்வோரின் கால்களில் காயம் ஏற்படுகிறது.
ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி நிர்வாகம்முறையாக ஆய்வு செய்து, கம்பி தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.