ADDED : ஜூலை 18, 2024 11:17 PM
வாலாஜாபாத்,:வாலாஜாபாத் பேரூராட்சி, சேர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 50; இவர், அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக வாலாஜாபாத் போலீசார் நேற்று வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, ராஜ்குமாரின் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 4,000 ரூபாய் மதிப்பிலான 2 கிலோ குட்கா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ராஜ்குமாரை வாலாஜாபாத் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.