Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ இடம் மாற்றி நடப்பட்ட 40 வயது அரச மரம் துளிர்விட்டதால் பசுமை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

இடம் மாற்றி நடப்பட்ட 40 வயது அரச மரம் துளிர்விட்டதால் பசுமை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

இடம் மாற்றி நடப்பட்ட 40 வயது அரச மரம் துளிர்விட்டதால் பசுமை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

இடம் மாற்றி நடப்பட்ட 40 வயது அரச மரம் துளிர்விட்டதால் பசுமை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

ADDED : ஜூன் 18, 2024 05:08 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், கலெக்டரேட் அருகில் உள்ள பல்லவன் நகர் குடியிருப்பு பகுதியில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் 40 வயதுடைய அரச மரம் ஒன்று இருந்தது.

மரம் இருந்த இடத்தில் குடியிருப்பு கட்டுவதற்காக, அந்த இடத்தின் உரிமையாளர் மரத்தை அகற்ற தீர்மானித்து அதற்கான பணியை துவக்கினார்.

இதை அறிந்த பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பசுமை மேகநாதன், காஞ்சி அன்னசத்திரம் மோகன் உள்ளிட்ட பசுமை ஆர்வலர்கள், மரத்தின் உரிமையாளரிடம் பேசி, மரத்தை வேருடன் எடுத்துச் சென்று மாற்று இடத்தில் நடவு செய்ய அனுமதி பெற்றனர்.

கடந்த மே மாதம் 14ம் தேதி பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு, ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிராண்ட் சங்கம், காஞ்சிபுரம் பச்சையப்பா சில்க்ஸ், காஞ்சி அன்னசத்திரம், மகிழம், பசுமை தேடி, வடலி உள்ளிட்டோர், ஜே.சி.பி., மற்றும் கிரேன்கள் உதவியுடன் அரச மரத்தை வேருடன் எடுத்து, லாரியில் ஏற்றிச் சென்றனர்.

கீழ்கதிர்பூர் ஏரிக்கரையில் நடவு செய்து, 40 ஆண்டு மரத்திற்கு மறுவாழ்வு அளித்தனர்.

தொடர்ந்து மரம் துளிர் விடுவதற்காக ஆயத்தப் பணியை துவக்கி, மரத்திற்கு முறையாக தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர்.

தன்னார்வலர்களின் தொடர் முயற்சியாலும், காஞ்சிபுரத்தில் அவ்வப்போது பெய்த கோடை மழையாலும், வேருடன் பிடுங்கப்பட்டு கீழ்கதிர்பூரில் நடப்பட்ட 40 வயதுடைய அரச மரம் தற்போது துளிர்விட்டு வளர்கிறது.

இதனால், பசுமை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us