/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உலக நன்மைக்காக கூரம் கிராமத்தில் கோ பூஜை உலக நன்மைக்காக கூரம் கிராமத்தில் கோ பூஜை
உலக நன்மைக்காக கூரம் கிராமத்தில் கோ பூஜை
உலக நன்மைக்காக கூரம் கிராமத்தில் கோ பூஜை
உலக நன்மைக்காக கூரம் கிராமத்தில் கோ பூஜை
ADDED : ஜூன் 01, 2024 04:08 AM
கூரம் : ஞ்சிபுரம் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் உலக நன்மை, குடும்ப நலன், வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ய வேண்டி, காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில், கோ பூஜை விழா நேற்று நடந்தது.
இதில், பசுக்களுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இடப்பட்டு, கோ பூஜை மந்திரங்கள் ஓதப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சன்ஸ்காரசாலா ஆசிரியை விஜயலட்சுமி கோ பூஜைக்கான ஏற்பாடு செய்திருந்தார். மாவட்ட துர்கா வாகினி அமைப்பாளர் கார்குழலி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இதில், மாவட்ட செயலர் சதீஷ்குமார் உள்ளிட்ட விஸ்வ ஹிந்து பிரிஷத் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.