/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் விமரிசை வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் விமரிசை
வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் விமரிசை
வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் விமரிசை
வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் விமரிசை
ADDED : ஜூன் 04, 2024 05:57 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில், நடப்பாண்டிற்கான வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சப்பரத்தில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள் ராஜவீதிகளில் உலா வந்தார். மாலை சிம்ம வாகன உற்சவம் நடந்தது.
இரண்டாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை ஹம்ஸ வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் வைகுண்ட பெருமாள் உலா வந்தார்.
இதில், மூன்றாம் நாள் உற்சவமான நேற்று காலை, கருடசேவை உற்சவம் நடந்தது.
இதில், கருட வாகனத்தில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.
ஏழாம் நாள் உற்சவமான வரும் 7ம் தேதி காலை, தேரோட்டமும், ஜூன் 9ம் தேதி காலை தீர்த்தவாரியும், இரவு முகுந்த விமானத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.