ADDED : ஜூலை 29, 2024 06:19 AM

ஸ்ரீபெரும்புதுார், : சுங்குவார்சத்திரம் அடுத்த சிறுமாங்காடு சந்திப்பில், வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, 'நம்பர் பிளேட்' இல்லாமல், எச்சூரைச் சேர்ந்த ரவுடி சுரேஷ், 33, ஓட்டி வந்த 'ஆர்15' பைக்கை நிறுத்தினர்.
சுரேஷ், முனுக்கு பின் முரணாக பேசியதால், அவர் ஓட்டிவந்த பைக்கை சோதனையிட முயன்றனர்.
அப்போது, வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த அவர், போலீசாரை வெட்டி விடுவதாக மிரட்டியுள்ளார்.
சுரேஷை மடக்கி பிடித்த போலீசார், கத்தியை பிடிங்கி, சோதனை செய்தனர். பைக்கில் 1 கிலோ கஞ்சா இருந்தது.
இதையடுத்து போலீசார், சுரேஷை கைது செய்தனர். இவர், எச்சூர் ஊராட்சி தலைவர் மகன் ஆல்பர்ட் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடதக்கது.