/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலை வளைவுகளில் ஒளிரும் எச்சரிக்கை பலகை விபத்தை தவிர்க்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை சாலை வளைவுகளில் ஒளிரும் எச்சரிக்கை பலகை விபத்தை தவிர்க்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை
சாலை வளைவுகளில் ஒளிரும் எச்சரிக்கை பலகை விபத்தை தவிர்க்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை
சாலை வளைவுகளில் ஒளிரும் எச்சரிக்கை பலகை விபத்தை தவிர்க்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை
சாலை வளைவுகளில் ஒளிரும் எச்சரிக்கை பலகை விபத்தை தவிர்க்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை
ADDED : ஜூன் 10, 2024 04:58 AM

திருவள்ளூர் : திருவள்ளூரில் இருந்து, ஊத்துக்கோட்டை, செங்குன்றம் சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வகையில், சாலை வளைவுகளில் இரவில் ஒளிரும் எச்சரிக்கை பலகையை நெடுஞ்சாலை துறை அமைத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கார் உற்பத்தி தொழிற்சாலைகள், மொபைல் போன் உற்பத்தி, இரும்பு தொடர்பான உற்பத்தி தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன.
இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் கன்டெய்னர் போன்ற கனரக வாகனங்களில், வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.
இந்த வாகனங்கள் பெரும்பாலானவை ஆந்திர மாநிலம் வழியாக, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக திருவள்ளூர் வந்து, ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் உள்ளிட்ட தொழிற்பேட்டைகளுக்கு சென்று வருகின்றன.
மேலும், சென்னை பூந்தமல்லியில் பகுதியில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலத்திற்கும், செங்குன்றம், பெரியபாளையம் சாலை வழியாக, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலைக்கும் தினமும், 1,000த்திற்கும் மேற்பட்ட பயணியர் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இதையடுத்து, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் - தாமரைப்பாக்கம் - செங்குன்றம் சாலை குறுகலாக இருப்பதால், கனரக வாகனங்கள் பயணிக்க சிரமப்படுகின்றன.
மேலும், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையையும், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில், இச்சாலைகளை, மாநில நெடுஞ்சாலைத் துறையினர், அகலப்படுத்தி வருகின்றனர்.
சாலை நடுவில் தடுப்பு சுவர் அமைத்து, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இவ்விரண்டு சாலைகளை ஒட்டி, கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு சாலைகள் அமைந்துள்ளன. மேலும், பள்ளிகள், சாலை வளைவுகளும் அதிகளவில் உள்ளன. சாலை அகலப்படுத்தப்பட்டு வருவதால், இச்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றனர்.
இதனால், சாலையோரம்உள்ள வளைவுகள் மற்றும்கிராம இணைப்பு பிரிவு சாலைகளில் அவ்வப்போது, விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக இரவு நேரத்தில், ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் சாலையில், போதுமான மின்விளக்கு வசதி இல்லாததால், இருளில் மிதக்கிறது.
இரவில் வேகமாக வரும் வாகனங்களால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு, பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இதையடுத்து, நெடுஞ்சாலை துறையினர், ஊத்துக்கோட்டை சாலையில், பூண்டி மற்றும் நெய்வேலி கிராமங்களுக்கு பிரிந்து செல்லும் இடத்தில், இரவில் ஒளிரும் எச்சரிக்கை பலகை மற்றும் தானியங்கி சிக்னல் அமைத்துள்ளனர்.
அதேபோல், செங்குன்றம் சாலையில், ஈக்காடு சர்ச் அருகில் உள்ள சாலை வளைவு, மெய்யூர் கூட்டு சாலை உள்ளிட்ட இடங்களிலும், இரவில் ஒளிரும் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.
இதனால், வேகமாக வரும் வாகனங்கள் இந்த எச்சரிக்கை பலகையால், வேகத்தை குறைத்து மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் கோட்ட நெடுஞ்சாலைத் துறையின் இந்த நடவடிக்கை கிராமவாசிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.