/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்ற விவசாயிகள் வலியுறுத்தல் சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 06, 2024 11:51 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் - எல்.எண்டத்தூர் சாலையில், மணித்தோட்டம் கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு சீரான மின்சாரம் வழங்கும் வகையில், மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மின்மாற்றியை தாங்கி பிடிக்க நான்கு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், முன்பக்கம் உள்ள இருமின்கம்பங்களில் சிமென்ட் காரை உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது.
பலத்த காற்றுடன் மழை பெய்தால், சிதிலமடைந்த மின்கம்பம் உடைந்து விழுந்தால், மின்விபத்து ஏற்படுத்தும் சூழல் உள்ளது.
எனவே, சேதம் அடைந்துள்ள இரு மின்கம்பத்தையும் அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மணித்தோட்டம் கிராம விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.