/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சியில் 19ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் காஞ்சியில் 19ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
காஞ்சியில் 19ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
காஞ்சியில் 19ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
காஞ்சியில் 19ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ADDED : ஜூலை 16, 2024 01:13 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், ஒவ்வொரு மாதமும், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்று வருகிறது.
ஜூலை மாதத்திற்கான இக்கூட்டம், வரும் 19ம் தேதி, காலை 10:00 மணிக்கு, கலெக்டர் வளாக கூட்டரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலை வல்லுனர்கள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள், விவசாயிகளின் சந்தேகங்கள் மற்றும் திட்டங்கள் பற்றி விளக்கம் அளிப்பார்கள். மேலும், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை துறை, வருவாய் துறை என பல்வேறு துறை சம்பந்தமான கோரிக்கைமற்றும் புகார்களை விவசாயிகள் தெரிவிக்கலாம்.