ADDED : ஜூன் 08, 2024 04:44 AM
காஞ்சிபுரம், : வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன், 46; விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், வயல்வெளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவர் மீது மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார், இளங்கோவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.